காஸா துப்பாக்கிச் சூட்டில் ஓய்வு பெற்ற இந்திய அதிகாரி பலி.!! - Seithipunal
Seithipunal


காசாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் தற்போது வரை சுமார் 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல லட்சம் மக்கள் போரால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஐநா பாதுகாப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் காசாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு குழுவில் பணியாற்றி வந்த இந்திய அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 46 வயதாகும் வைபவ் அணில் காலே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் காஸாவின் ராஃபா நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வைபவ் அணில் காலே உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

United nation Indian officer murdered in Gaza


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->