'தேர்தலில் பாஜ-அதிமுக கூட்டணிக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள்'; அமைச்சர் எ.வ.வேலு ..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சுமத்தியுள்ளார்.  திருவண்ணாமலையில் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

பேரிடர் காலங்களில் வழங்க வேண்டிய புயல் நிதி, கல்வி நிதி, ஜல்ஜீவன் பங்குத்தொகை, நூறு நாள் வேலைத்திட்ட நிதி உள்ளிட்ட எந்த நிதிகளையும் ஒன்றிய அரசு மாநில அரசிற்கு வழங்காமல் வஞ்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்பொழுதுள்ள காஸ் (சமையல் எரிவாயு ) தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தலில் பாஜ-அதிமுக கூட்டணிக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என்றும், தோழமைக் கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து தற்பொழுது பேசி வருகிறதாக தெரிவித்துள்ளதோடு, அடுத்த கட்டமாக தொகுதி குறித்து தோழமையோடு தோழமையாக பேசவுள்ளதாக நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister EV Velu asserts that the people will teach a fitting lesson to the BJP and AIADMK alliance in the elections


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->