படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சாதி அடையாளத்தை குறிப்பிட்டு பேசிய பார்த்திபன்; வச்சு செய்யும் இணையவாசிகள்..!
Parthiban sparks fresh controversy by referencing his caste identity during the films pre release event
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர். ராதாகிருஷ்ணன் பார்த்தீபன். பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். ஆனாலும் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி, வம்பில் மாட்டிக் கொள்வார்.
இந்நிலையில், பார்த்திபன் நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் 'உஸ்தாத் பகத் சிங்'. இதில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ள நிலையில், இந்தப் படம் வரும் மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் தனது சாதி அடையாளத்தை வெளிப்படையாக கூறி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக மேடையில் பேசிய பார்த்திபன் கூறியதாவது; ''என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்.;'' என்று பேசியுள்ளார். தற்போது இது சர்ச்சையாகியுள்ளது.
முன்னதாக நடிகை த்ரிஷா குறித்து நடிகர் பார்த்திபன் பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், ''திரிஷாவின் ட்வீட் குறித்து முன் கூட்டியே தெரிந்திருந்தால் வருத்தம் கூறியிருக்கமாட்டேன்'' என்று மீண்டும் பேசி வம்பில் மாட்டிக்கொண்டார்.
இன்னலையில், சாதி பெருமை குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இணையவாசிகள் சிலர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Parthiban sparks fresh controversy by referencing his caste identity during the films pre release event