98-வது ஆஸ்கார் விருதுகள்...! வரலாறு படைத்த பெண் ஒளிப்பதிவாளர்...! - 4 பிரிவுகளில் வென்ற 'Sinners'
98th Academy Awards Female Cinematographer Makes History Sinners Wins 4 Categories
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் 98-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில், ஒட்டுமொத்தத் திரையுலகின் கவனத்தையும் ஈர்த்த 'சின்னர்ஸ்' (Sinners) திரைப்படம் 4 விருதுகளை அள்ளிச் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் நடித்த மைக்கேல் பி. ஜோர்டன் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நிலையில், இயக்குநர் ரயான் கூக்ளர் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதைத் தட்டிச் சென்றார்.
மேலும், சிறந்த அசல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் லுட்விக் கோரன்சன் தனது இரண்டாவது ஆஸ்கார் விருதைப் பெற்று அசத்தியுள்ளார்.
குறிப்பாக, இப்படத்திற்காகச் சிறந்த ஒளிப்பதிவு விருதை வென்ற ஆட்டம் டுரால்ட் அர்காபாவ், ஆஸ்கார் வரலாற்றிலேயே இவ்விருதைப் பெறும் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
English Summary
98th Academy Awards Female Cinematographer Makes History Sinners Wins 4 Categories