அதிகாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் தடுப்புச் சுவரில் மோதி நொருங்கியது...! - 28 பயணிகள் உயிர் தப்பியது எப்படி...? - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அதிகாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணம் செய்த 28 பேரும் எந்தவித காயமும் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.கோவையில் இருந்து சென்னையை நோக்கி இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது.

அந்த பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர்.பஸ் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தாறுமாறாக சென்ற பஸ், சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது.தடுப்புச்சுவரில் மோதியதில் பஸ் சேதமடைந்தது. இருப்பினும் அதில் பயணம் செய்த 28 பேரும் காயமின்றி தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீரமைத்தனர்.மேலும், விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrific accident early morning Omni bus lost control and crashed barrier How did 28 passengers escape alive


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->