தனித்து போட்டியிடும் தவெக; ஆலோசனை கூட்டத்தில் விஜய் முடிவு..? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உள்ளிட்ட 05 மாநிலங்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான உத்தியோகபூரை தேதியை நேற்று இந்திய தேர்தல் த்தலைமை ஆணையர் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. 10 நாட்கள் களைத்து மே 04 ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த சொல்லலில் தமிழகத்தில் தற்போதுவரை நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக விஜய் மற்றும் நாதக சீமான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தேர்தலில், தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரம் மற்றும் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று திடீரென தவெக தலைவர் விஜய், சென்னை தேனாம்பேட்டையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, பிற்பகல் 03.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் இரவு 07 மணிக்கு நிறைவடைந்தது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தவெக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது, விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்து விரைவில் அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தனித்து போட்டியிடுவதில் தான் உறுதியாக இருப்பதாகவும், அது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசியதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Decides TVK Will Contest Independently During Consultative Meeting


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->