'இஸ்லாமியர்களுடன் எங்களுக்கு இருப்பது சகோதர பாசம்; திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது'; துணை முதல்வர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துகே கொண்டு உரையாற்றினார். அவர் அங்கு பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் என்றும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். நமக்குள் இருப்பது சகோதர பாசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தாலும் தி.மு.க-வுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது என்றும், கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர். இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், இஸ்லாமியர்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிவுள்ளதாகவும், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பத்து தர்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உலமாக்களின் ஓய்வூதியம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது நமது திராவிட மாடல் அரசு தான் என்றும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுப்பது தி.மு.க தான் என்று பேசியுள்ளார்.

மேலும், சி.ஏ சட்டத்திற்கு எதிராக முதலாவதாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது திமுக. பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது. திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுபான்மை மக்கள் நலன்பற்றி கவலையில்லாமல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும், சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் பழனிசாமி என்று விமர்சித்துள்ளதோடு, திமுகவிற்கு இஸ்லாமிய பெருமக்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deputy Chief Minister states that the DMK shares a bond of fraternal affection with Muslims


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->