ரஷ்யா மீது 170 டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன் ராணுவம்; சுட்டு வீழ்த்திய ரஷ்யா; விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்..! - Seithipunal
Seithipunal


ரஷ்யா -உக்ரைன் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகின்றது. ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை சிதைக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கடந்த வார இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் தலைமையிலான படைகள் 430 டிரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி, நேற்று நள்ளிரவில் உக்ரைன் ஏவிய 170 டிரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்த 27 டிரோன்களும் அடங்கும் என கூறப்படுகிறது.

இந்த வான்வெளி தாக்குதலால் மாஸ்கோவின் நுக்கோவோ மற்றும் கலகா விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பிரையன்ஸ்க், பெல்கோரோட், ஸ்மோலென்ஸ்க் மற்றும் ரோஸ்டோவ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த தாக்குதல் குறித்து உக்ரைன் ராணுவம் குறிப்பிட்டுள்ளதாவது:

ரஷ்ய ராணுவத்திற்கு எரிபொருள் வழங்கும் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள அபிப்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காவ்காஸ் துறைமுகம் ஆகியவற்றை இலக்காக வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.இருப்பினும், இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukrainian Military Launches 170 Drone Attacks on Russia


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->