முதலமைச்சரை சந்தித்த முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள்...! - முதலீடுகள் குறித்து தீவிர ஆலோசனை - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து விஜய் அதிரடி நிர்வாக நடவடிக்கைகள் மூலம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் ஈர்த்து வருகிறார்.

பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” அமைத்தது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது, மதுக்கடைகள் மூடல் தொடர்பான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உயரதிகாரி காவலர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய வியூகங்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் தீவிர கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த உயர்மட்ட சந்திப்பில், பி.எம்.டபிள்யூ., டி.வி.எஸ்., ஹட்சன் உள்ளிட்ட முன்னணி வாகன மற்றும் தொழில் நிறுவனங்களின் நிர்வாக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் புதிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பது, தொழில் வளாகங்களை விரிவுபடுத்துவது, வேலைவாய்ப்புகளை பெருக்குவது மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலீட்டு திட்டங்களின் முன்னேற்ற நிலையை ஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Leading business leaders met Chief Minister Serious discussions investments


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->