சிஜேபியினருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை ஜோதிகா; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென பதிவு..!
Actress Jyothika has written a post demanding that Dharmendra Pradhan resign
நீட் தேர்வு கசிவு உள்ளிட்டவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த திங்கள்கிழமை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளுவில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாட்டை உலுக்கியது.
இதையடுத்து, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிகளான சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோருடன் 02-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், கோரிக்கைகள் குறித்து அரசு எடுத்த முடிவுகளை இன்று பிற்பகல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், டெல்லி ஜந்தர் மந்தரில் பேசிய கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்த போராட்டத்திற்கு பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது "மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" என நடிகை ஜோதிகா வலியுறுத்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளதாவது; "களத்தில் போராடும் மாணவர்களுடன் துணை நிற்கிறேன். நமது தேசத்தின் எதிர்காலத்திற்கும் ஆதரவாக நிற்கிறேன்.
நான் ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கிறேன். நான் சீர்திருத்தப்பட்ட கல்விக்கு ஆதரவாக நிற்கிறேன். சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ், ஒரு தாயாக எங்கள் குழந்தைகள் உங்களைப் போல வளர வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஜென் Z இளைஞர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்கு பெருமைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, "நாம்தான் இந்தியா" என்பதை நிரூபித்துள்ளீர்கள். அழுத்தங்களையும் பயத்தையும் உடைத்தெறிந்ததற்கு நன்றி. எங்களை அச்சமின்றி பேசத் துணிவூட்டியதற்கு நன்றி. ஜெய் ஹிந்த்!" என்று ஜோதிகா பதிவிட்டுள்ளார்.
English Summary
Actress Jyothika has written a post demanding that Dharmendra Pradhan resign