தொடரும் காவல் மரணங்கள்; 'ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசு' என முதல்வர் விஜய்யை விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின்..!
MK Stalin asks when Chief Minister Vijay will speak out about police deaths
தமிழகத்தில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் வாயைத் திறப்பது எப்போது? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகரைச் சேர்ந்தவர் 24 வயது அருணாச்சலம் என்ற இளைஞர் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்ததாக கடந்த 17ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்.
அன்று மாலையே அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து உறவினர்கள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி கடந்த (23ஆம் தேதி) உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை தாக்கியதாலே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு தவெக அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்.
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
MK Stalin asks when Chief Minister Vijay will speak out about police deaths