எந்த மாதிரி பெண் வேண்டும் அனிருத்? எனக்கு திருமணத்துக்கு இந்த மாதிரி பெண் வேண்டும்!அனிருத் சொன்ன பதிலை பாருங்க.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணை தொடர்பாக கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார். அண்மையில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்திருந்தார். மேலும், 'ஜெயிலர் 2', 'தர்மன்' உள்ளிட்ட படங்களிலும் அவர் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், அனிருத்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் அவ்வப்போது பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் திருமணம் நடைபெறலாம் என்ற தகவல்கள் சமீப காலமாக பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "'ஜீன்ஸ்' திரைப்படத்தில் வரும் மதுமிதா போன்ற பெண்ணா, இல்லை வைஷாலி போன்ற பெண்ணா?" என்று அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஐஸ்வர்யா ராய்" என்று சிரித்தபடி பதிலளித்தார்.

அனிருத்தின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அவரது நகைச்சுவையான பதிலை ரசிகர்கள் பலரும் பாராட்டி, பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What kind of woman does Anirudh want This is the kind of woman I want for marriage Take a look at Anirudh reply


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->