திரையரங்குகளை அதிரவைத்த 'ஜனநாயகன்' புயல்...! 1000+ திரைகளில் வெளியாகி ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாட்டம்...!
Jananayakan theatrical Release in 1000 plus screens fans celebrated wildly
விஜய் ரசிகர்கள் பல மாதங்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.தணிக்கை தொடர்பான சிக்கல்களைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

விஜய்யின் திரைப்பயணத்தில் இறுதிப் படமாக இப்படம் அமையும் எனக் கூறப்படுவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. உலகளவில் 3,500-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. கேரளம் மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் காலை 8 மணிக்கும் திரைப்படம் வெளியானது.
இதையொட்டி, சென்னை கேசினோ, தேவி, ரோகிணி, சத்யம், காசி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட முக்கிய திரையரங்குகளின் முன்பாக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.திரையரங்குகளின் முன்பாக திரண்ட ரசிகர்கள் விஜய்யின் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியும், முழக்கங்களை எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விஜய்யின் பிரம்மாண்டமான கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது ரசிகர் உணர்வை வெளிப்படுத்தினர். இதனால் பல திரையரங்குகளின் வளாகங்கள் திருவிழா போல் காட்சியளித்தன.விஜய்யின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படும் ‘ஜனநாயகன்’, ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான படமாக அமைந்துள்ளது.
இதனால், படத்திற்கு தொடக்கம் முதலே மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் மற்றும் படத்திற்கான எதிர்பார்ப்பு, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
English Summary
Jananayakan theatrical Release in 1000 plus screens fans celebrated wildly