“அரசன் ஒரு மேஜிக்கலான அனுபவம்!” – சிம்புவுடன் நடிப்பது குறித்து பிரியங்கா மோகன் சொன்ன முக்கிய விஷயம்! - Seithipunal
Seithipunal


நடிகை பிரியங்கா மோகன் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஃபீல் குட் படமாக கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படம் குறித்து பிரியங்கா மோகன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் மூலம் பிரியங்கா மோகனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் வேகமாக உயர்ந்தது. இதையடுத்து சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’, ரவி மோகனுடன் ‘பிரதர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் நானி, பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது பிரியங்கா மோகன் நடித்து வரும் முக்கியமான திரைப்படம் ‘அரசன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் முதன்முறையாக சிம்புவுடன் பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ‘அரசன்’ குறித்து பேசிய பிரியங்கா மோகன், “எனக்கு வெற்றிமாறன் சாரை ரொம்ப பிடிக்கும். ‘அரசன்’ படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். சிம்புவுடன் முதன்முறையாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் சிம்புவை வித்தியாசமான ஒருவராக பார்ப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் வடசென்னை பாஷையில் தான் பேசியிருப்பதாகவும், அந்த வகையான மொழி நடையைப் பயன்படுத்துவது தனக்கு இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார்.

“இந்தப் படத்தில் வடசென்னை பாஷையும் பேசியிருக்கிறேன். அப்படி பேசுவது இதுதான் எனக்கு முதன்முறை. ‘அரசன்’ ஒரு மேஜிக்கலான அனுபவமாக இருந்தது” என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

‘அரசன்’ படத்தில் சிம்பு மற்றும் பிரியங்கா மோகனுடன் விஜய் சேதுபதி, யோகலட்சுமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு அனிருத் முதன்முறையாக இசையமைப்பதால் இசை மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ‘அரசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்தின் பணிகள் திட்டமிட்ட காலத்தை விட நீண்டதால், தீபாவளி ரேஸில் இருந்து ‘அரசன்’ விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்பு–வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் சிம்புவை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாம் என்று பிரியங்கா மோகன் கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arasan is a magical experience Priyanka Mohan shares a key insight about acting with Simbu


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->