பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறை: அறிமுக மேடையிலேயே 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்; சீசன் 10 இன்று தொடக்கம்! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று மாலை 6 மணிக்கு விமர்சையாகத் தொடங்குகிறது. 100 நாட்கள் வெளி உலகத் தொடர்பின்றித் தங்கி விளையாடும் இப்போட்டியில், வழக்கமாக அறிமுக நிகழ்ச்சியின் முடிவில் தேர்வான அனைத்துப் போட்டியாளர்களும் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது வழக்கம். ஆனால், இந்த சீசனில் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக அறிமுக மேடையிலேயே இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய அறிமுக நிகழ்ச்சியின் போது, நடிகைகள் லஷ்மிபிரியா, ஷாத்திகா மற்றும் ஷப்னம் ஆகிய மூவரில் இருந்து ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குச் செல்ல முடியும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேடையில் பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற நடிகைகள் ஷாத்திகா மற்றும் ஷப்னம் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியாமல் மேடையிலேயே வெளியேற்றப்பட்டனர். அதிக வாக்குகளைப் பெற்ற நடிகை லஷ்மிபிரியா மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மேலும், இம்முறை 'பிக் பாஸ் காமன் மேன்' என்ற தேர்வு மூலம் பொதுமக்கள் தரப்பிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர் இந்த 10-வது சீசனில் போட்டியாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். முதல் நாளிலேயே அரங்கேறியுள்ள இந்த அதிரடித் திருப்பங்கள், பிக் பாஸ் ரசிகர்களிடையே இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two Contestants Eliminated on Launch Stage for First Time in Bigg Boss History Season 10 Begins Today


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->