மேற்கு ஈரானில் பிரேக் பழுதாகி டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து: 11 பேர் பரிதாப பலி; 7 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


மேற்கு ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சனந்தாஜ் நகர் அருகே, எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது.

சனந்தாஜ் - ஹமடான் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள போக்குவரத்து காவல் சோதனைச் சாவடி அருகே இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. டேங்கர் லாரியின் பிரேக் திடீரெனப் பழுதானதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீது பலமாக மோதியது. மோதிய அடுத்த சில விநாடிகளில் லாரியில் இருந்த எரிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், அருகில் இருந்த கார்களுக்கும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தி காயமடைந்தவர்களை மீட்டுச் சனந்தாஜ் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டிலும் சனந்தாஜ் அருகே எரிபொருள் டேங்கர் லாரியும் பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஈரானில் மோசமான பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் தவறுகளால் ஆண்டுதோறும் ஏற்படும் சாலை விபத்துகளில் 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fuel Tanker Explodes in Western Iran Killing 11 and Injuring 7 After Brake Failure Near Sanandaj


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->