தீபாவளி ரயில் முன்பதிவுத் தொடக்கம்: நவம்பர் 5-ஆம் தேதி பயணத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன! - Seithipunal
Seithipunal


இவ்வாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப்டம்பர் 6) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. தற்போது ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறை நடைமுறையில் உள்ளது.

அதன்படி, பண்டிகைக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ஆம் தேதி பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உட்படப் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் ரயில்களில் அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

தொடர்ந்து, நவம்பர் 6-ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு நாளையு (செப். 7), நவம்பர் 7-ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு நாளை மறுதினமும் (செப். 8) நடைபெற உள்ளது. அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்ப விரும்புவோர் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் மறுபயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணம், பாதுகாப்பு மற்றும் நேரமின்மை காரணமாக பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புவதால், ஆன்லைன் மற்றும் ஏஜென்சிகள் வாயிலாக முன்பதிவு செய்ய மக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diwali Train Ticket Booking Begins Tickets for Nov 5 Travel Sold Out Within Minutes Across Express Services


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->