சாதிவாரிக் கணக்கெடுப்பில் தெளிவான வழிமுறை தேவை: சமூகநீதியைக் காக்கச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு மேற்கொள்ள உள்ள 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சரியாக நடத்த வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் கணக்கிட முன்நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் (Pre-determined drop-down list) இல்லாமல், பொதுமக்கள் தெரிவிக்கும் சாதிப் பெயர்களைத் திறந்தநிலை வடிவில் (Open-ended format) பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 'OBC பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகளே தவிர சாதிகள் அல்ல' என்ற மத்திய அரசின் விளக்கம் முற்றிலும் ஏற்புடையதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலைத் தொகுத்துப் பதிவேற்றி, அதில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதே குழப்பங்களைத் தவிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், திறந்தநிலை பதிவால் நாட்டில் 46 லட்சத்திற்கும் அதிகமான சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு மட்டுமே வரும் என எச்சரித்துள்ளார். இதனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காகச் செலவிடப்படும் சுமார் ரூ.12,000 கோடியும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணாகி, இத்திட்டம் வெறும் கண்துடைப்பாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டியலின மக்களைப் போலவே OBC மக்களின் உண்மையான எண்ணிக்கை, கல்வி மற்றும் பொருளாதார நிலையை அறிந்து அவர்களுக்குரிய சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு உரிமைகளை உறுதி செய்வதே இக்கணக்கெடுப்பின் முதன்மை நோக்கமாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக இத்தவறுகளைத் திருத்தி சரியான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இதுதொடர்பாகச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin Demands Flawless Caste Census Urges Assembly Resolution to Safeguard OBC Rights


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->