விஜய் சார் ஒரு குழந்தை: வேலாயுதம் படப்பிடிப்பில் வாங்கிய முதல் கார்; சமீபத்திய பேட்டியில் நடிகர் சூரி நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


'வேலாயுதம்' திரைப்படப் படப்பிடிப்பின் போது நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகள் குறித்து நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அப்பேட்டியில் பேசிய அவர், "நான் எனது முதல் காரை 'வேலாயுதம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போதுதான் வாங்கினேன். காரை வாங்கியவுடன், அதனை விஜய் அண்ணாவிடம் கொடுத்து ஓட்டிப் பார்க்குமாறு சொன்னேன். அவரும் எவ்வித தயக்கமுமின்றி உடனே காரை ஓட்டிப் பார்த்தார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யின் பண்பு நலன்கள் குறித்துப் பேசிய சூரி, "விஜய் சார் ஒரு அசாதாரணமான மனிதர். படப்பிடிப்புத் தளத்தில் அவர் சிரிக்கும் போது, அங்கிருக்கும் எங்களுக்கு இன்னும் கூடுதல் உற்சாகமும் ஆற்றலும் கிடைக்கும். விஜய் சார் ஒரு குழந்தை போன்றவர்; நாம் நகைச்சுவை செய்து பேசினால் அவர் அவ்வளவு குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Soori Recalls Buying First Car During Velayudham Shoot Praises Actor Vijay Simplicity and Childlike Nature


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->