"2 பெட்டிகளில் கோடிகளில் பணம்... எந்த அமைச்சர் பதவி வேண்டும்": IUML எம்.எல்.ஏ சையது ஃபாரூக் பாஷா பேச்சால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகள் தீவிரக் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சட்டமன்ற உறுப்பினர் சையது ஃபாரூக் பாஷா கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள விவரங்கள் பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியுள்ளன.

கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சையது ஃபாரூக் பாஷா, "தேர்தல் முடிவடைந்த பிறகு, 2 பெட்டிகளில் கோடிக் கணக்கில் பணத்தைக் கொண்டு வந்து வைத்து, உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும் என எங்களிடம் கேட்டனர்" என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் குதிரை பேரம் குறித்த புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும், ஒரு 'ஒப்புதல் வாக்குமூலம்' போலவும் இவ்விவகாரம் பார்க்கப்படுவதால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. IUML எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IUML MLA Syed Farooq Basha Claims Money and Ministerial Offers Were Made Post-Elections Amid Horse-Trading Allegations


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->