டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் பிஜி விடுதி கட்டிடம் இடிந்து கோர விபத்து: இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது! - Seithipunal
Seithipunal


டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்களுக்கான கட்டண தங்கும் விடுதியாக (PG) செயல்பட்டு வந்த பலமாடி கட்டிடம் ஒன்று இன்று மதியம் 1.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கல்லூரி மாணவர்கள் அதிகம் வசசிக்கும் இந்தப் பகுதியில் அமைந்திருந்த அந்த விடுதியில் சுமார் 50 பயணிகள்/மாணவர்கள் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், கட்டிடம் சரிந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் உடனடியாக இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியோரை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மக்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிந்து விழுந்த கான்கிரீட் கூரையின் கீழ் சிக்கியுள்ள நபரை மீட்க மீட்புப் பணியாளர்கள் போராடும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

சத்ய நிகேதன் பகுதியில் பல கல்லூரிகள் அமைந்துள்ளதால் அப்பகுதியில் பெருமளவிலான மாணவர்கள் பிஜி விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய விபத்து நிகழ்ந்திருப்பது அங்குத் தங்கியுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் எழுப்பியுள்ளது. கட்டிட விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் அதேவேளையில், முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களின் பலம் மற்றும் அதில் வசிப்பவர்களின் பாதுகாப்பையும் அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PG Accommodation Building Collapses in Delhi's Satya Niketan Around 50 Trapped Rescue Operations Underway


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->