பாரிஸில் முதல் இந்து கோயில் திறப்பு; BAPS அமைப்பு வரலாற்றுச் சாதனை; சிலையை பிரதிஷ்டை செய்த மஹந்த் சுவாமி மஹராஜ் ஆசியுரை..!
First Hindu temple in Paris inaugurated by BAPS organization
பிரான்ஸ் நாட்டின், பாரிஸில் முதல் ஹிந்து கோவில் அங்குள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸில், இன்று (06-ஆம் தேதி) திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவரான மகாந்த் சுவாமி மகாராஜ், வேத மந்திரங்கள் ஓத பிரதீஷ்டை செய்துவைத்துள்ளார்.
இன்று காலை 06:45 மணி முதல் 09:00 மணி வரை, வேத மந்திரங்கள் முழங்க மற்றும் மகாபூஜையுடன் நடைபெற்ற இந்த பிரதீஷ்டை நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.
இந்த முதல் ஹிந்து ஆலயத்தில், ஸ்ரீ அக்ஷர்-புருஷோத்தம் மகாராஜ் (பகவான் ஸ்ரீ சுவாமிநாராயண் மற்றும் குணாதீதானந்த் சுவாமி), பகவான் ஸ்ரீ ராதா-கிருஷ்ணா, பகவான் ஸ்ரீ சீதா-ராம், ஸ்ரீ அனுமன் மற்றும் லட்சுமணன், பகவான் சங்கர் மற்றும் பார்வதி, ஸ்ரீ கணேசர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயன், சுவாமி ஸ்ரீ ஐயப்பன், மற்றும் பகவான் ஸ்ரீ பத்மாவதி-வெங்கடேஸ்வரர் ஆகியோரின் உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன.

1970-ஆம் ஆண்டில், யோகி மகாராஜ் பாரிஸில் ஒரு ஆலயத்தை அமைப்பதற்கான தொலைநோக்குத் திட்டத்திற்கு ஆசி வழங்கினார். அவரது ஆன்மீக வாரிசான பிரமுக் சுவாமி மகாராஜ் அந்தத் திட்டத்தை முன்னெடுத்து தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹிந்து கோவில் திறப்பு விழாவின் போது, மகாந்த் சுவாமி மகாராஜ், யோகி மகாராஜுக்கு எழுதப்பட்ட ஒரு தனிப்பட்ட கடிதத்தை வாசித்து, அவரது தொலைநோக்குப் பார்வைக்கு அஞ்சலி செலுத்தினார். பிரான்சின், புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸின் கலாச்சாரச் சூழலுக்கு இந்த ஆலயம் ஒரு புதிய பரிசு என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூர்த்தி பிரதிஷ்டையைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டு மக்களின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகவும், உலக அமைதிக்காகவும் மஹந்த் சுவாமி மஹராஜ் பிரார்த்தனை செய்தார். அத்துடன், தனது ஆசியுரையில், இக்கோயிலுக்காகப் பணியாற்றிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். அத்துடன் பிரமுக் சுவாமி மஹராஜின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், அனைவரும் இக்கோயிலின் மூலம் பயனடையவும், நம்பிக்கை மற்றும் பக்தியுடன் சேவையாற்றவும் ஊக்குவித்துள்ளார்.
இக்கோயிலின் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் (Bussy-Saint-Georges) மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களில் 13 நாட்கள் நீடிக்கும் கலாச்சாரத் திருவிழா (பாரிஸ் மந்திர் மஹோத்சவ்) நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்களுக்கான பக்தி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. முக்கியப் பிரமுகர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
English Summary
First Hindu temple in Paris inaugurated by BAPS organization