திருவான்மியூரில் தவெக நிர்வாகி கொடூர கொலை; 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாஸ்திரி நகர் அடுத்த வண்னாந்துறையை சேர்ந்த கண்ணன், கடந்த 2 மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

நேற்று சனிக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கண்ணனை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் ஐந்து பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதில் தலைமறைவானவர்களை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திருவான்மியூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் கண்ணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் காவல் துறையினர் பழிக்கு பழியாக கொலை நடந்ததா? அல்லது அரசியல் நோக்கமா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக பரணி, கார்த்திக், ஹரிகரன், மணி, நரேஷ் ஆகிய ஐந்து பேரை சாஸ்திரி நகர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமிருந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களையும் சாஸ்திரி நகர் தனிப்பட்ட போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police have arrested 5 people in the brutal murder of a Tvk executive in Thiruvanmiyur


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->