இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 09 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்; ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


கடந்த 22-ஆம் தேத, ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 09 மீனவர்களையம், 01 விசை படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

அவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக  வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்திய மீனவர்களை வரும் 06-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சிதையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10000-க்கும் மேற்பட்டவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தவெக அரசு மீனவர்கள் பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மீனவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லாத சூழலே நிலவுகிறதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், மீனவர் சங்கத்தினர் முதலமைச்சருன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fishermen in Rameswaram go on strike demanding action to release 09 fishermen arrested by the Sri Lankan Navy


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->