'ப்ரீ ஃபயர்' ஆன்லைன் கேமுக்கு அடிமை; பறிபோன வாலிபரின் உயிர்; சங்கரன்கோவிலில் சோகம்..! - Seithipunal
Seithipunal


சங்கரன்கோவிலில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 01-வது  தெருவை சேர்ந்த சுதந்திரகுமார் மகன் மாதவன் (19). கூலி வேலை செய்து வந்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளில் ஒன்றான 'ப்ரீ பயர்' கேமிற்கு முழுமையாக இவர் அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் 'ப்ரீ பயர்' கேமிற்கு நேரம் செலவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கச்சென்ற பிறகு, மாதவன் அவரது மாடியில் தனது அறைக்கு சென்றுள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மாதவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளனர்.

தற்கொலை குறித்து தகவல் அறிந்த சங்கரன் கோவில் டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாதவனின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் விளையாட்டு மோகம் காரணமா..? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா..? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man addicted to the online game Free Fire committed suicide in Sankarankovil


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->