சேலத்தில் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து தவெக பிரமுகரை சிக்க வைத்த உயிர் நண்பர்..? பணத்தை திருப்பி கேட்டதால் நண்பியை வைத்து அரங்கேற்றிய நாடகம்..! - Seithipunal
Seithipunal


சேலம் கொண்டலாம்பட்டி சின்னபுத்தூரை சேர்ந்த தவெக பிரமுகரான மணிகண்டன் (39). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொண்டதோடு, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதாகவும், அதனை வைத்து பெண்களை விபசாரத்திற்கு தள்ளிவிடுவதாகவும் பெண் ஒருவர் சமூகவலைதளங்களில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில், கொண்டலாம்பட்டி போலீசார், மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில்,03 பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதில் ஒரு பெண் மட்டும் புகார் கொடுத்த நிலையில்,  மற்ற 02 பெண்களும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இந்த சூழலில் வீடியோ வெளியிட்ட பெண்ணை முக்கிய பிரமுகர் ஒருவர் மறைத்து வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில்,வந்து ஒரே வாரத்தில் இன்னொரு பெண் விவகாரத்தில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.  ஆனால் அந்த பெண்ணும், மணிகண்டன் தன்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மீண்டும் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டனை இந்த வழக்கில் சிக்க வைத்தது யார்? என்ற முழுவிவரத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளமை  இந்த வழக்கில் புதிய திருப்பத்தையும்ம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, மளிகை வியாபாரியான மணிகண்டன் பெண்களுடன் தவறான தொடர்பில் இருக்க அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், அவர் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அவரது உற்ற நண்பரிடம் குறிப்பட்ட தொகையை கொடுத்து வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

07-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மணிகண்டனுக்கு பெண்களுடன் நெருங்கி இருக்கும் காட்சிகளை செல்போனில் எந்த பகுதியில் லாக் செய்து வைக்க வேண்டும் என்று தெரியாது. இதனால், அவர் தனது உயிர் நண்பரிடம் செல்போனை கொடுத்து விவரத்தை தெரிவித்துள்ளார். ஆனால், அதனை தனக்கு சுத்தமாகவும் தவறாகவும் பயன்படுத்தி கொண்ட நண்பர், அந்த ஆபாச வீடியோ காட்சிகளை அவரது செல்போனுக்கு அனுப்பி வைத்துக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் நண்பனுக்கு தான் கொடுத்த பணத்தை மணிகண்டன் திருப்பிக் கேட்டுள்ளார். அதற்காக மணிகண்டனை எப்படியாவது பெண்கள் ஆபாச வீடியோக்களை வைத்து சிறைக்கு தள்ள திட்டமிட்டுள்ளார். 

அதற்காக அவர் நண்பர்கள் மூலமாக எல்லா வேலையையும் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. மணிகண்டனோ பணம் என்று கேட்டாலே சிறைக்கு தான் போக வேண்டும் என தெரியாமலே அவரது நண்பர் மிரட்டி வந்துள்ளார். அதாவது தனது செல்போனின் ரகசிய நம்பர், நண்பருக்கு மட்டும் தான் தெரியும் என சிறைக்கு சென்ற பிறகு மணிகண்டனுக்கு னிவாவுக்கு வர அதன்படி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் காணொலியில் பேசியது யார்? என்பதையும் போலீசார் கண்டுப் பிடித்துள்ளனர். அந்த பெண்ணும், மணிகண்டனின் உயிர் நண்பரின் நெருங்கிய தோழி என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இவர்கள் மணிகண்டனை சிக்கவைக்க பெரிய நாடகம் ஒன்றை நடத்தி போலீசாரை ஏமாற்றியுள்ளனர். போலீசார் நெருங்கியதும் மணிகண்டன் நண்பர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A close friend who blackmailed women in Salem and caught a prominent figure in a pornographic video


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->