'தேசம் இதை என்றும் மறக்காது'...! - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நெகிழ்ந்து பாராட்டிய தமிழிசை சௌந்தரராஜன்...! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,"தார்மீகப் பொறுப்பை ஏற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியில் இருந்து விலகியிருப்பது, ஜனநாயகப் பொறுப்புணர்வின் உயரிய வெளிப்பாடாகும். எனினும், மத்திய கல்வி மந்திரியாக அவர் நாட்டிற்காக ஆற்றிய சிறப்புமிக்க பங்களிப்பை எந்தச் சூழலும் மங்கச் செய்ய முடியாது.

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதிலும், இந்தியக் கல்வி அமைப்பில் தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலும் தர்மேந்திர பிரதான் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரது முயற்சிகள் இந்தியாவின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நான் பணியாற்றிய காலகட்டத்தில், ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்தோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தர்மேந்திர பிரதான் முழு மனதுடன் ஆதரவளித்து, எங்களுடன் உறுதியாக நின்றார். அவரது ஒத்துழைப்பும் ஆதரவும் அந்த முக்கியமான கல்வி மாற்றத்தை செயல்படுத்துவதில் பெரும் துணையாக அமைந்தது.

அதன்பிறகு புதுச்சேரி அரசு பள்ளிகளுக்குச் சென்றபோது, சமூகத்தின் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சி.பி.எஸ்.இ. கல்வியின் மூலம் புதிய தன்னம்பிக்கையுடனும், உயர்ந்த இலட்சியங்களுடனும் கல்வி கற்பதை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கல்வித் துறைக்கும், நாட்டிற்கும் தர்மேந்திர பிரதான் ஆற்றிய தன்னலமற்ற சேவையை இந்திய மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள். இனிவரும் காலங்களிலும் தனது திறமையாலும், அர்ப்பணிப்பாலும், அனுபவத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பங்களிப்பார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது" என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nation will never forget this Tamilisai Soundararajan who moved praise Union Minister Dharmendra Pradhan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->