தமிழ்நாட்டிற்காக லண்டனில் ரூ. 12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் விஜய்..!
Chief Minister Vijay attracted investments worth rs12300 crore for Tamil Nadu in London
தமிழக முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 06 நாள் பயணமாக லண்டனின் சென்றுள்ளார். அங்கு இதுவரை ரூ. 12,300 கோடி முதலீட்டில் சுமார் 9,400 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
விஜய் கடந்த 10-ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி லண்டனில், அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் லண்டன் பயணம் குறித்தும், முதலீடுகள் குறித்தும் கேள்வி எழுப்பி வந்தனர்.
அந்தவகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறினார்கள். ஆனால், அது தொடர்பான புகைப்படம் எதுவும் இதுவரை வரவில்லை. வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது" எனத் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று மொத்தம் ரூ. 12,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் கூறியுள்ளதாவது;
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு.பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு.குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''இன்று மொத்தம் ரூ. 12,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடு செய்து, 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Chief Minister Vijay attracted investments worth rs12300 crore for Tamil Nadu in London