விஜய் சேதுபதி பேசிய தலைமைப் பண்பு குறித்த கேள்வி; அமைச்சர் ரமேஷ் கூறியது என்ன..?
What did Minister Ramesh say in response to the question regarding leadership qualities raised by Vijay Sethupathi
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்தச் சூழலில், அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
கும்பாபிஷேகம் நிகழ்வை பொதுமக்கள் பார்க்க, நிறைய இடங்களில் எல்.இ.டி. திரையை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கண்காணிப்புகளை அதிகரித்திருக்கவுள்ளதாகவும், வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாத பைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுமக்களுக்கு நேர்மையான முறையில் பாஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் விநியோகிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாகவும், இந்த முறை 09 ஆயிரம் பாஸ்களை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என எந்த அரசியலும் பார்க்காமல் நியாயமாக அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். இந்த முறை எந்தவிதமான குளறுபடிகளும், முறைகேடுகளும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், விஜய் சேதுபதியிடம், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ரமேஷ், ''அரசியல் ரீதியான கேள்விகள் இருந்தால் கேளுங்கள், நிச்சயமாக பதில் சொல்கிறேன்”'' என அந்தக் கேள்வியை கடந்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
What did Minister Ramesh say in response to the question regarding leadership qualities raised by Vijay Sethupathi