''நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்''; அதிமுக..!
The AIADMK states that it will provide legal support to actor Vijay Sethupathi to protect his right to freedom of expression
விஜய் டிவி -இல் பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கடந்த 03 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தலைவருக்கான தகுதி குறித்து பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், ''விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்.'' என அதிமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான இன்பதுரைத் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 06-ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து லீடர், ஹவுஸ்மேட்ஸ் என அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக சட்டமன்றம் மாதிரி வடிவம் போன்று, மாமன்றம் அமைப்பில் பிக்பாஸ் நடைபெறுகிறது. சமூகத்தில் அனைவரும் அரசியல் பேசி வரும் சூழலில், பிக்பாஸிலும் இந்த அமைப்பு உருவாகியுள்ளது.
இதில் ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாகப் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆளும் அணியின் தலைவராக ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவியாக வினோத் பாபுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சட்டமன்றம் போல நிர்வாக அணி, எதிர் அணி என 02 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவு நடந்த நிகழ்வில் போட்டியாளர்களிடையே பிக்பாஸ் தொகுப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதி பேசுகையில் கூறியதாவது.
''தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமை பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, எதிரணி மீது பழியை தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை'' என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி, முதலமைச்சர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான இன்பதுரை, ''நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்.''எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
The AIADMK states that it will provide legal support to actor Vijay Sethupathi to protect his right to freedom of expression