ரவி உடனான உறவு...! ரவி-ஆர்த்தி பிரிவில் தன் பெயர் அடிபடுவது குறித்து கெனிஷா ஓபன் டாக்...!
Relationship Ravi Kenisha opens up about her name being mentioned Ravi Aarthi segment
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிவை நோக்கிச் செல்லும் நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து திருமணப் பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து சட்டப்பூர்வ விவாகரத்து வழங்குமாறு ரவி மோகன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவாகரத்து வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குறிவைத்து அவதூறு பரப்பவோ, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடவோ கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த சூழலில், ரவி மோகனின் நெருங்கிய தோழி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவியை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்பட்டதால், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்த தளத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கருத்து வெளியிடக்கூடாது என கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், “என்னை பற்றி அறியாமல் விமர்சனம் செய்ய வேண்டாம்” என்று வலியுறுத்தி கெனிஷா வெளியிட்ட காணொளி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்த காணொளியில், “சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்தேன். அதன் பின்னர் உறவினர்களின் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானேன்.
தொடர்ந்து திருமண வாழ்க்கையிலும் குடும்ப வன்முறையை சந்திக்க நேர்ந்தது. அந்த வேதனையில் கருவில் இருந்த என் குழந்தையையும் இழந்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் துயரங்களுடனும் போராட்டங்களுடனும் தான் நான் பயணம் செய்திருக்கிறேன்.
அம்மா, அப்பா, குழந்தை என எனது வாழ்வின் முக்கியமான உறவுகளை இழந்த நான், இன்னொருவரின் குடும்பத்தை சிதைக்க நினைப்பேனா? ரவி மோகன் குழந்தை அல்ல. தனது வாழ்க்கையை பற்றிய முடிவுகளை சுயமாக எடுக்கக்கூடிய முதிர்ச்சியுள்ள மனிதர் அவர்.
அப்படி இருக்கும்போது என்னை ஏன் இந்த விவகாரத்தில் இழுத்து விமர்சிக்கிறீர்கள்? சமூகத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பற்றி பேசுங்கள்” என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Relationship Ravi Kenisha opens up about her name being mentioned Ravi Aarthi segment