மாசற்ற ஆந்திரா...! வெள்ளிக்கிழமை தோறும் இனி சைக்கிள் பயணம்...! - முதல்வரின் அதிரடி முன்னெடுப்பு...! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் போர் பதற்ற சூழ்நிலையின் தாக்கம் உலக நாடுகளில் எரிபொருள் மற்றும் மின்சார சிக்கன விழிப்புணர்வை அதிகரித்துள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு “என் நாடு-என் பொறுப்பு” என்ற புதிய இயக்கத்தை அறிமுகப்படுத்தி சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள எரிசக்தி சிக்கன திட்டங்கள் குறித்து விரிவான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது,"இந்த நாடு நமக்கு எண்ணற்ற வாய்ப்புகளையும் வளங்களையும் வழங்கியுள்ளது.

இப்போது நாட்டிற்காக நாம் பங்களிக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வளங்களை மிகுந்த சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

அரசு அலுவலகங்களில் குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வாகனமில்லா நாள்’ கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அன்றைய தினத்தில் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சைக்கிள்களை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Immaculate Andhra Pradesh Now cycling every Friday Chief Minister bold initiative


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->