தேர்வு முறைகளை மேம்படுத்துவது குறித்து இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது குறித்து இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையிலான பணிக்குழு ஆராய்ந்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி காணொளி வாயிகாக அறிவித்துள்ளார். அந்த காணொளியில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது;

மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறைகளில் அழுதுக்கொண்டு இருக்கிறாங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''நாங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம். நாளை நாடாளுமன்றத்திலும், கடுமையான சட்ட விதிகளுடன் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் திசையில் முன்னேறி வருகிறோம்'' என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

நேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவடைந்த ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் எனவும், நமது தேர்வு முறையில் தற்போது தொழில்நுட்பத்தின் அதிகபட்ச பயன்பாடு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தேர்வு சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்வு முறைகளை மேம்படுத்துவது குறித்த குழுவில் நிலேகனியைத் தவிர, பணிக்குழுவின் உறுப்பினர்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்களும் அடங்குகின்றனர். அவர்கள் நாட்டின் தேர்வு முறைகளை, குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலமாகவும் மேம்படுத்த உதவுவார்கள் என்று திர்பார்க்கப்படுகிறது.

குழுவில் மற்றையாக உறுப்பினர்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் இயக்குநர் தபன் தேகா, ஐஐடி சென்னையின் இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கவல் மற்றும் தளவாட நிபுணர் அம்ரித் லால் மீனா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi says high level committee to be formed under Infosys co founder Nandan Nilekani to improve examination systems


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->