''தென்னிந்திய பின்னணியில் பிறந்து வளர்ந்ததில் தனக்கு பெருமை மட்டுமே உண்டு''; மொழி உச்சரிப்பு விமர்சனங்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலடி..!
Actress Rashmika Mandanna hits back at criticism regarding her accent
கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் தளபதி விஜய் உடன் வாரிசு மற்றும் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரான விஜய் தேவரைகொண்டாவை காதலித்து கரம்பிடித்தார்.
இந்நிலையில் ராஸ்மிகா ஒரு இதழுக்கு அளித்த பேட்டியியில் அவர், ''தென்னிந்திய பின்னணியில் பிறந்து வளர்ந்ததில் தனக்கு பெருமை மட்டுமே உண்டு.'' என்று அவரின் இந்தி உச்சரிப்பு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தி மொழிப் படங்களில் ராஷ்மிகா மந்தனாவின் மொழி உச்சரிப்பு குறித்து எழும் சர்ச்சைகளுக்கு அவர் துணிச்சலுடன் பதிலளித்துள்ளார். அஅதாவது, எனது தாய்மொழி கொடவா என்றாலும், உணர்வுகளை வெளிப்படுத்த இயல்பாகவே ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய மொழிகளை கற்பது மிகவும் சவாலானது. எனது உதவியாளர் தெலுங்கு பேசுபவர் என்பதால் அவரிடம் உணவு கேட்பதற்காகவே தெலுங்கு பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அதன் மூலமே அம்மொழியை கற்றதாக தெரிவித்துள்ளார்.
இப்போது தென்னிந்திய ரசிகர்கள் எனது பேச்சு அவர்களின் பாணியில் இல்லை என்கிறார்கள். வட இந்தியர்களோ எனது உச்சரிப்பு தென்னிந்திய சாயலில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் இங்கிருந்து வந்தேனா அல்லது அங்கிருந்து வந்தேனா என்று அவர்களே குழம்புகிறார்கள்.
நான் தென்னிந்தியாவில் படித்து வளர்ந்தவள் என்பதால், அதன் தாக்கம் என்னிடம் நிச்சயம் இருக்கும். அதை எண்ணி நான் கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகாவின் இந்த துணிச்சலான பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
English Summary
Actress Rashmika Mandanna hits back at criticism regarding her accent