மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; அக் 06-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 06-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அப்பகுதிகளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் செவ்வாய்க்கிழமையன்று, செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் மேற்கண்ட தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொது விடுமுறை (Negotiable Instruments Act-ன் கீழ்) அளிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தத் தொகுதிகளில் வாக்காளர்களாகப் பதிவு செய்து, வெளி மாவட்டங்களில் பணிபுரிபவர்களுக்கும் அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அரசு தனது அரசாணையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 09-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 19 ஆகும்.

திமுக, அதிமுக, த.வெ.க, நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதிகளில், அக்டோபர் 06-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 09-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவு ள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public holiday announced for October 6 for the Maduranthakam and Dharapuram by elections


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->