20-க்கும் மேற்பட்ட தையல்கள்.. 6 நாளில் ஷூட்டிங் வந்த மகிமா நம்பியார்! “அந்தப் பாடலுக்கு பின்னால் பெரிய உழைப்பு இருக்கு” – இயக்குநர் நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், உலகளவில் ரூ.79.93 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பாய்மர படகு பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.

‘மண்டாடி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுகாஸ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, நடிகர் சூரி, நடிகை மகிமா நம்பியார், நடிகர் சுகாஸ், நடிகர் சத்யராஜ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, மகிமா நம்பியாரின் அர்ப்பணிப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். “மகிமா நம்பியார் கொடுத்த பேட்டியை பார்த்தேன். இதில் பர்ஃபார்ம் பண்ணிட்டு போயிட்டு, நீங்கள் அழுததெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த எஃபர்ட்டுக்கு ரொம்ப நன்றி” என்றார்.

தொடர்ந்து, ‘உசுரே நீதான்’ பாடல் படப்பிடிப்பின்போது மகிமா நம்பியார் எதிர்கொண்ட சிரமம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். “இந்தப் பாடலைப் பற்றி சொல்லும்போது, உங்களுக்கு நடந்த அந்த ஆக்சிடென்ட் நிறைய பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அதை சொல்லணும்னு நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

“‘உசுரே நீதான்’ பாடல் படப்பிடிப்பிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மகிமாவுக்கு ஒரு பெரிய விபத்து நடந்தது. அதில் முகத்தில் காயங்கள் ஏற்பட்டு, 20-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு அவரது முக அமைப்பே மாறியது. அந்த நிலையில் எனக்கு செல்ஃபி எடுத்து அனுப்பினார்கள். அந்த நேரத்திலும் நான் கூச்சமே இல்லாமல், ‘ஷூட்டிங் வர முடியுமா?’ என்று கேட்டேன். ஏனென்றால் என்னுடைய சூழ்நிலை அப்படி இருந்தது” என மதிமாறன் புகழேந்தி தெரிவித்தார்.

மேலும், “அறுவை சிகிச்சை முடிந்து ஆறே நாட்களில் அவர் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். அந்தப் பாடலுக்கு பின்னால் மகிமாவின் பெரிய உழைப்பு இருக்கிறது. அதற்காக உண்மையில் அவருக்கு பெரிய நன்றி” என்று இயக்குநர் கூறினார்.

இந்தப் பேச்சு விழாவில் இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. படத்திற்காக நடிகை மகிமா நம்பியார் மேற்கொண்ட அர்ப்பணிப்பு குறித்து இயக்குநர் வெளிப்படையாகப் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.

விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் சூரியின் திரைப்பயணம் குறித்து பாராட்டிப் பேசினார். “கூட்டத்தில் ஒருவராக பார்த்த சூரி இன்று நம்மில் ஒருவராக இருக்கிறார். அவர் வெற்றி பெறுவதை மக்கள் அவர்கள் வீட்டு பிள்ளை ஜெயிப்பதாக நினைத்து கொண்டாடுகிறார்கள்” என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.

‘மண்டாடி’ படத்தின் வசூல் வெற்றி ஒருபுறம் கவனம் பெற்றுள்ள நிலையில், படத்திற்காக மகிமா நம்பியார் மேற்கொண்ட கடின உழைப்பு குறித்த இயக்குநரின் பேச்சும் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Over 20 stitches Mahima Nambiar showed up for the shoot in just six days A lot of hard work went into that song Director moved


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->