கன்னியாகுமரியில் விநாயகர் ஊர்வலம்...! பாதுகாப்பு கருதி 11 வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று, நாளை மூடல்...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடைபெற உள்ள 11 முக்கிய வழித்தடங்களில் உள்ள குறிப்பிட்ட மதுபானக் கடைகளை இன்று மற்றும் நாளை மூட மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெறும் சிலை கரைப்பு ஊர்வலங்களின்போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலங்கள் இன்று (19.9.2026) மற்றும் நாளை (20.9.2026) ஆகிய 2 நாட்களில் நடைபெற உள்ளன.

இதன்படி, நாகர்கோவிலில் இருந்து சொத்தவிளை கடற்கரை, மேல்புறத்தில் இருந்து குழித்துறை, நாகர்கோவிலில் இருந்து சங்குதுறை கடற்கரை, சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி, தோவாளையில் இருந்து பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூட்டில் இருந்து மிடாலம், அஞ்சுகண்கலுங்கில் இருந்து தேங்காய்பட்டணம், செருப்பாலூரில் இருந்து திற்பரப்பு, வைகுண்டபுரத்தில் இருந்து வெட்டுமடை, மேல்புறத்தில் இருந்து குழித்துறை மற்றும் பம்மத்தில் இருந்து குழித்துறை என மொத்தம் 11 வழித்தடங்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.

விநாயகர் சிலை ஊர்வலங்கள் செல்லும் மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மட்டும் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஊர்வலம் தொடங்கும் நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட கடைகள் மூடப்பட வேண்டும்.

ஊர்வலம் முழுமையாக நிறைவடைந்து, அப்பகுதியில் நிலவும் சூழல் சீராகும் வரை அவற்றைத் திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊர்வலங்கள் அமைதியாக நடைபெறுவதற்கும், பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு ஊர்வலம் நடைபெறும் 11 வழித்தடங்களில் உள்ள குறிப்பிட்ட மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.இவ்வாறு மாவட்ட கலெக்டரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ganesha procession in Kanyakumari TASMAC shops on 11 routes closed today and tomorrow safety reasons


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->