"35 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம்": திரைப்படத் தணிக்கை விதிகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
CBFC Issues Revised Film Certification Guidelines After 35 Years Mandates Anti-Drug Warning and Stricter Content Restrictions
வன்முறை & குற்றச் செயல்கள்: வன்முறை மற்றும் குற்றச் செயல்களைப் பெருமைப்படுத்தும் காட்சிகளை உருவாக்கக் கூடாது; குற்றவியல் செயல்களைச் செய்யும் முறைகளைத் (Modus Operandi) துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறைத் தடை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பாலாத்காரம், சீண்டல்கள் அல்லது இது போன்ற பிற பாலியல் தொடர்பான கொடூரக் காட்சிகள் திரைப்படங்களில் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
கட்டாயப் போதைப்பொருள் எச்சரிக்கை: போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் படங்களின் திரையில், "சட்டவிரோத போதைப்பொருள்கள் ஆரோக்கியத்தை அழித்து, நிச்சயம் சிறைத் தண்டனைகளை பெற்றுத் தரும். போதைப்பொருள்களைத் தவிர்ப்போம்" என்ற எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு: வன்முறைச் செயல்களில் குழந்தைகளைப் பாதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றவாளிகளாகவோ அல்லது சாட்சிகளாகவோ சித்தரிக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் & விலங்குகள் பாதுகாப்பு: மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான அநாவசியக் கொடுமைகள் ஆகியவற்றுக்கும் தணிக்கை விதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு & வெளிநாட்டு நட்புறவு: நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, அல்லது வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலோ உள்ளடக்கங்கள் இடம்பெறக் கூடாது.
English Summary
CBFC Issues Revised Film Certification Guidelines After 35 Years Mandates Anti-Drug Warning and Stricter Content Restrictions