உடல் பருமனால் உருவக் கேலிக்கு ஆளான நடிகை கத்ரீனா கைப்: இணையவாசிகளுக்கு பதிலடி கொடுத்த ஷிவலீகா ஓபராய்..!
Actress Katrina Kaif faced body shaming due to weight gai
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், தனது கணவர் விக்கி கௌஷலுடன், மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தின் 'ஆண்டிலியா' இல்லத்தில் நடைபெற்ற பிரமாண்டமான விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார்.
குழந்தைக்கு தாயான பிறகு கத்ரீனா கைப், கலந்து கொண்ட முதல் முக்கிய பொது நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்வில் அவர் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டார். ஆனால் அவர், உடல் எடைகூடி குண்டாக இருந்ததால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஒரு சிலர் அவரது தற்போதைய புகைப்படங்களை பழைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு, அவரது அழகு குறைந்துவிட்டது மற்றும் வயதாகிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.
ஒரு சிலர் ஒரு பெண் தாயான பின்னர் அவரது உடலில் ஹார்மோன் மாற்றங்கள், உடல் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படுவது முற்றிலும் இயற்கையானது. அதை விடுத்து, உடனே பழைய தோற்றத்திற்கு திரும்ப வேண்டும் என நட்சத்திரங்கள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்புகள் தவறானவை என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகை கத்ரீனா கைப்பிற்கு ஆதரவாக நடிகை ஷிவலீகா ஓபராய், 'உருவ கேலி விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக பதிலடியை கொடுத்துள்ளார். அதாவது, அவர் கத்ரினாவின் புகைப்படத்தை பகிர்ந்து, ''மக்களுக்கு என்னதான் ஆகிவிட்டது?! இதுதான் தாய்மை!. பிரசவத்திற்கு பிறகு உடல் இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது இப்படித்தான் இருக்கும்.
அதில் நன்மைகள், சவால்கள், உடல் வீக்கம் அதீத சோர்வு என எல்லாமே கலந்திருக்கும். நிஜ வாழ்க்கையில் இல்லாத ஒரு கற்பனையான தாய்மை தோற்றத்தை இணையத்தில் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். கடந்த சில நாட்களாக கத்ரீனாவுக்கு எதிராக பகிரப்படும் பல மோசமான பதிவுகளை பார்த்த பிறகு, மக்களின் இத்தகைய முட்டாள்தனமான மற்றும் மோசமான சிந்தனை போக்கை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை''என பதிலை கொடுத்துள்ளார்.
அத்துடன் , ''பெண்களின் உடலை பொதுச் சொத்தாக கருதி விமர்சிப்பதை ஆண்கள் நிறுத்த வேண்டும்.'' என்று நடிகர் அலி ஜாபர் தெரிவித்துள்ளார்.
English Summary
Actress Katrina Kaif faced body shaming due to weight gai