பெரியநத்தம் பகுதியில் கொடூரம்; கழிவறையில் வழுக்கி விழுந்த மாமியாரின் கழுத்தில் மிதித்தே கொன்ற மருமகள்; உடற்கூறு ஆய்வில் அம்பலமான உண்மை..!
Daughter in law kills mother in law by stomping on her neck after she slipped and fell in the bathroom
செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா. தம்பதிகளுக்கு திருமணமாகி 05 ஆண்டுகள் ஆகிறது. கணவருடன், மாமியார் பெருந்தேவியுடன் ஒரே வீட்டில் இந்துஜா வசித்து வந்துள்ளார்.
திருமணமான நாள் முதலே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், கணவன் - மனைவி இடையே ஏற்படும் அடிக்கடி சண்டைகளுக்கும் மாமியாரே காரணம் என இந்துஜா பெருந்தேவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பெருந்தேவி கழிவறைக்குச் சென்ற போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்துள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மருமகள் இந்துஜா மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
வழுக்கி விழுந்த மாமியாரின் கழுத்தில் மிதித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து, கண்ணீர் விட்டு கதறியுள்ளார். மாமியார் கழிவறையில் தவறி விழுந்து மூச்சுத்திணறலால் மயங்கிவிட்டதாகக் கூறி, அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பெருந்தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெருந்தேவியின் உடல் அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அப்போது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பெருந்தேவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டது அம்பமாகியுள்ளது. உடனே விசாரணையில் இறங்கிய செங்கல்பட்டு நகர காவல்துறையினர், இந்துஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த இந்துஜா, கடந்த 05 வருடங்களாகவே மாமியார் தன்னுடைய நிம்மதியைக் கெடுத்து வந்தார். அவர் இறந்தால் தான் நாங்கள் சந்தோஷமாக வாழ முடியும் என்பதால் தான் கொலை செய்தேன் என பகிரங்கமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்துஜாவை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Daughter in law kills mother in law by stomping on her neck after she slipped and fell in the bathroom