சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடி குறித்தும் இந்து மதம் குறித்தும் அவதூறு; பெண் பத்திரிகையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி மற்றும் ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதித்த பெண் பத்திரிகையாளர் கரிஷ்மா அஜீஸ் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் இந்து மதக் கோட்பாடுகள், துறவிகள், வரலாற்றுத் தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் ஆகியோரை அவமதிக்கும் வகையிலும், முகலாய மன்னர் ஔரங்கசீப்பை புகழ்ந்தும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன. குறிப்பாக பிரதமர் மோடியை நாயுடன் ஒப்பிட்டு மிகவும் இழிவாக சித்தரித்து வீடியோக்களும் பதிவிடப்பட்டன.

இது குறித்து வழக்கறிஞர் அமிதா சச்தேவா என்பவர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கரிஷ்மா அஜீஸ் என்ற பெண் பத்திரிகையாளர் சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இழிவான பதிவுகளை வெளியிட்டதாகவும், எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீதான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீசார் தாக்கல் செய்த பதிலில், இந்த பதிவுகள் ஆபாசமாகவும் அரசியல் விமர்சனம் அல்லது நையாண்டி நோக்கிலும் உள்ளதே தவிர, மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் திட்டமிட்டு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் மிருதுல் குப்தா, இந்த புகாரில் விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்கள் இருப்பதாக தெரிகிறதாகவும், இது கருத்து சுதந்திர வரம்பிற்கு உட்பட்ட நையாண்டியா அல்லது குற்றவியல் எல்லைக்கு அப்பாற்பட்டதா என்பதை முழுமையான விசாரணைக்கு பிறகே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 175(3)-இன் கீழ் டெல்லி சைபர் கிரைம் போலீசார் இந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A court has ordered the registration of a case against a female journalist for posting defamatory content about PM Modi and the Hindu religion on social media


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->