''16 வயதிலேயே சொந்த ஊரைவிட்டு வெளியேறியமைக்கு காரணம் தெலுங்கு சமூகத்தின் குறுகிய மனப்பான்மை''; சொந்த மாநில மக்கள் குறித்து நடிகை சோபிதா துலிபாலா கருத்தால் சலசலப்பு..!
A stir has been caused by actress Sobhita Dhulipalas remarks regarding the narrow mindedness of the Telugu community
பிரபல தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா, இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
ஐதராபாத் நகரைச் சேர்ந்த அஹல்யா என்ற சமூக வலைதள பிரபலம், தெலுங்கு சமூகத்தினர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போதிய ஆதரவு அளிப்பதில்லை என்று ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், ''தெலுங்கு மக்கள் தங்களது கலை மற்றும் கலாசாரத்தை பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்; ஆனால், தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் புதிதாக தொழில் தொடங்கினாலோ அல்லது உணவகம் அமைத்தாலோ அவர்களுக்கு ஆதரவு தருவதில்லை; மாறாக அதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பி விமர்சிக்கிறார்கள்,'' என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவிற்கு நடிகை சோபிதா துலிபாலா, வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அந்த பதிவுக்கு துலிபாலா கருத்து தெரிவித்துள்ளதாவது;
''வழக்கத்திற்கு மாறான புதிய லட்சியங்களை நோக்கி பயணிப்பவர்களை தெலுங்கு சமூகம் மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் பார்த்தது. மற்றவர்களை எளிதில் எடைபோட்டு விமர்சிக்கும் அந்த சூழல் எனக்கு கடும் மன உளைச்சலை தந்தது. இதன் காரணமாகவே எனது 16 வயதிலேயே சொந்த ஊரைவிட்டு வெளியேறினேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சொந்த மாநில மக்கள் பற்றிய நடிகை சோபிதா துலிபாலாவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டு, தற்போது இணையதளங்களில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A stir has been caused by actress Sobhita Dhulipalas remarks regarding the narrow mindedness of the Telugu community