சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்; குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலை. மசோதா..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் மே 11 முதல் 13-ஆம் தேதி வரை மற்றும் ஜூன் 18 முதல் 23-ஆம் தேதி வரையும், 02-வது கூட்டம்  ஆக.05 முதல் செப்.08-ஆம் தேதி வரையும் நடைபெற்றது.

இந்த பேரவை கூட்டத்தில் விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்தல், புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தல், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தச் சட்டம்,

டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்புக்கூட்டு வரி, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம், நகர் ஊரமைப்பு மற்றும் திட்டமிடல் திருத்தச் சட்டம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குதல் உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றில் 12 மசோதாக்களுக்கு கூட்டத்தொடர் முடிந்த 05 நாட்களுக்குள்ளாகவே ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில், தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்த மசோதா மட்டும் இறுதி முடிவுக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின்  ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 மசோதாக்கள், தற்போது சட்டங்களாகியுள்ளன. குறித்த அனைத்து சட்டங்களும் தமிழக அரசிதழில் செப்டம்பர்15-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Governor grants assent to 12 of the 13 bills passed by the Legislative Assembly


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->