''தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான். அதில் அரசு உறுதியாக உள்ளது''; அமைச்சர் ராஜ்மோகன்..!
Minister Rajmohan announces that the two language policy will always remain in force in Tamil Nadu
தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான். அதில் அரசு உறுதியாக உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது;
''காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதன் மூலம் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், இதற்காக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பள்ளிகளில் சமையலறை, பாத்திரங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய உணவு வகைகள் பட்டியல் உருவாக்க சிறப்புக் குழு அமைக்கப்படவுள்ளதாகவும், சிறைக் கைதிகளுக்குகூட சிக்கன் பிரியாணி கிடைக்கும்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு அதை வழங்கலாமே என்ற விருப்பம் முதல்வருக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறதாகவும், சுகாதாரமான முறையில் சிக்கன் பிரியாணி தயாரித்து வழங்குவது சாத்தியமா..? என்று சோதனை முயற்சி மூலம் ஆய்வு செய்து, வருங்காலத்தில் மாணவர்களுக்கு நிச்சயமாக சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான். அதில் அரசு உறுதியாக உள்ளதாகவும், ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை சரிசெய்யும் பணி நடந்து வருகிறதாகவும், தூய்மைப் பணியாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடங்களை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு அடையாளம் காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister Rajmohan announces that the two language policy will always remain in force in Tamil Nadu