''ரோகித் சர்மாவுடன் படுக்கையை பகிர்ந்தேன்: ஆனால், அந்த உறவில் அவர் சிறந்தவராக இருக்கவில்லை''; நடிகை சோபியா ஹயாத் வெளியிட்ட பகீர் தகவல்..!
Actress Sofia Hayat reveals a sensational claim about sharing a bed with Rohit Sharma
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன், அந்தரங்க படுக்கையறை உறவு வைத்துக்கொண்டதாக நடிகை சோபியா ஹயாத் கூறிய கருத்துக்கள் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து வாழ் இந்திய மாடல் அழகியும், நடிகையுமான சோபியா ஹயாத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மாவுடன் கடந்த 2012-ஆம் ஆண்டு காதலில் இருந்ததாக ஏற்கனவே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதிலும் முக்கியமாக, லண்டனில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இருவரும் முதன்முதலில் சந்தித்து நடனமாடியதாகவும், பின்னர் சுமார் 1 ஆண்டு காலம் மும்பையின் ஜூஹூ, பாந்த்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரகசியமாக சந்தித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால், அவர் ''சோபியா எனக்கு ஒரு ரசிகை மட்டுமே'' என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமும் மனவேதனையும் அடைந்த நடிகை, அவரை சமூக வலைதளத்தில் பிளாக் செய்துவிட்டு உறவை முறித்துக் கொண்டார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ரோகித் சர்மா இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் முழுமையான மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில், யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய சோபியா ஹயாத், தங்களின் பழைய அந்தரங்க உறவு குறித்து மீண்டும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது; ''நான் தான் ரோகித் சர்மாவின் முதல் காதலி. அவர் சர்வதேச அளவில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், படுக்கையறை உறவில் அவர் சிறந்தவராக இருக்கவில்லை. ஆண்களுக்கு படுக்கையில் எவ்வாறு உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை யாராவது கற்றுக் கொடுக்க வேண்டும். இந்திய வீரர் விராட் கோலியுடன் என்னை இணைத்து வெளியான செய்திகள் தவறானவை.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரமான ரோகித் சர்மா குறித்து நடிகை சோபியா ஹயாத் வெளியிட்டுள்ள இந்த பகீர் கருத்துக்கள் இணையதளங்களில் தற்போது பெரும் விவாதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Actress Sofia Hayat reveals a sensational claim about sharing a bed with Rohit Sharma