அனைத்து மொழிகளையும் என் சொந்த மொழியாகவே கருதுகிறேன்...! - நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடிப் பேச்சு...!
I consider all languages as my own language Actress Rashmika Mandhana Action Speech
மொழிகளின் எல்லைகளைத் தாண்டி இந்திய திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, எந்த மொழியாக இருந்தாலும் அதை தன்னுடைய மொழியாகவே கருதி நடிப்பதாக தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் காலடி பதித்தார்.

அதன்பிறகு ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’, ‘பீஷ்மா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் திரையுலகிலும் தடம் பதித்த அவர், ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.இந்தி திரையுலகிலும் தனது நடிப்பை பதிவு செய்த ராஷ்மிகா, ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்தார்.
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ திரைப்படத்தில் நடித்தது அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதன்மூலம் இந்திய அளவில் பரவலான கவனத்தை பெற்றார்.தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
‘மைசா’, ‘ரணபாலி’, ‘எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கைவசம் உள்ளன.இந்நிலையில், பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிப்பது குறித்து ராஷ்மிகாவிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை அந்நியமாக நினைப்பதில்லை என்றும், அனைத்து மொழிகளையும் தனது சொந்த மொழியாகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தந்த மொழி ரசிகர்களின் உணர்வுகளுக்கும், அவர்களின் அன்புக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் அந்த மொழியை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மொழி எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. தேவையற்ற விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒவ்வொரு திரைப்படத்திலும் எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
English Summary
I consider all languages as my own language Actress Rashmika Mandhana Action Speech