சென்னையில் பயங்கரம்: விடுதியில் வைத்து பணம் கேட்டு மிரட்டிய நபர்...! - பெண் கத்தியால் குத்திக் படுகாயம்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் விடுதிக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர், பணம் கொடுக்க மறுத்த 31 வயது பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த 31 வயது பெண்ணை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் உறவுக்கு அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபரின் பேச்சை நம்பிய பெண், அரும்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றுள்ளார்.பின்னர் விடுதியில் இருந்து வெளியே வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த அந்த நபர் திடீரென பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஆனால், பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.கத்திக்குத்தில் படுகாயமடைந்த பெண்ணை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் காவலர்கள், பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விடுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு பதிவுகளையும் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terror Chennai Man threatens woman knife at hotel Woman stabbed seriously injured


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->