திரைப்படத்தில் நடிப்பது மட்டும் போதாது...! மீனவர்களின் உண்மையான வலியைப் புரிந்து கொள்ள வேண்டும்...! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆவேசம் - Seithipunal
Seithipunal


மீனவர்களின் வாழ்க்கையை திரைப்படத்தில் பிரதிபலிப்பது மட்டுமே போதாது; கடலை நம்பி வாழும் அவர்களின் அன்றாட வேதனையையும் வாழ்வாதாரப் போராட்டத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது,"மீனவர்களின் வாழ்வாதாரமே கடலைச் சார்ந்துதான் உள்ளது.

கடலில் எதிர்கொள்ளும் சவால்களும், மீன்பிடித் தொழிலில் அவர்கள் சந்திக்கும் இன்னல்களும் எனக்கு நன்றாக தெரியும்.முதல்-அமைச்சர் விஜய், ‘சுறா’ திரைப்படத்தில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால், திரைப்படத்தில் மீனவராக நடிப்பது மட்டும் போதாது. கடலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்களின் உண்மையான வலியையும், அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.கடலைத் தவிர வேறு தொழிலை அறியாத அளவுக்கு தலைமுறை தலைமுறையாக மீன்பிடித் தொழிலையே நம்பி வாழும் மக்கள் ஏராளமாக உள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருப்பது கவலை அளிக்கிறது.எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

சென்னையில் அரசுக் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்து கட்டிடம் அமைக்கலாம்.

அதேபோல், நவோதயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Just acting movie not enough We must understand real pain fishermen Union Minister State L Murugan furious


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->