மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்...! வேட்புமனு வாபஸ் பெறப்பட்ட நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு...! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் 28 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதையடுத்து, ஏற்கப்பட்ட மனுக்களில் இருந்து ஒரு சுயேட்சை வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் மதுராந்தகம் தொகுதியில் தற்போது 27 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கி, 16-ந்தேதி நிறைவடைந்தது.

தமிழக வெற்றிக்கழகம், தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 51 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.இதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 17-ந்தேதி நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட 22 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

29 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் 27 பேரும், தாராபுரம் தொகுதியில் 22 பேரும் என இரு தொகுதிகளிலும் மொத்தம் 49 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இதையடுத்து இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhurantakam Tarapuram by elections Final list candidates released after nominations withdrawn


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->