நடிகர் அசோக் செல்வன் 70 அடியிலிருந்து குதித்த 'அன்பில் அவன்' மேக்கிங் வீடியோ வெளியீடு..!
A making of video has been released for the film Anbil Avan showing actor Ashok Selvan jumping from a height of 70 feet
நடிகர் அசோக் செல்வன் 'அன்பில் அவன்' படத்துக்காக 70 அடி உச்சியிலிருந்து நீருக்குள் குதித்துள்ளார். அது குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக 'தக் லைஃப்' படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அன்பில் அவன்'. இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். காதல், ஆக்ஷனை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்துக்காக நடிகர் அசோக் செல்வன் 70 அடி உச்சியிலிருந்து நீருக்குள் குதித்துள்ளார். இது தொடர்பான மேக்கிங் வீடியோவை நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது? அதற்காக அசோக் செல்வன் எடுத்த முயற்சிகள் என்ன? என்பது குறித்து வீடியோவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வீடியோவில் அவர் குதிக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. அதை படத்துக்காக சஸ்பென்ஸாக படக்குழுவினர் வைத்துள்ளனர். கடுமையான பயிற்சிக்குப் பின் அசோக் செல்வன் இந்த முயற்சியை மேற்கொண்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
English Summary
A making of video has been released for the film Anbil Avan showing actor Ashok Selvan jumping from a height of 70 feet